Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேர்தல் வியூகம் போட நான் வரவில்லை: பிரசாந்த் கிஷோர்!

On February 26, 2025
c13acf93-509b-4e8b-b78b-9983a964088d
Share

தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர், தான் தேர்தல் வியூகம் வகுப்பதிலிருந்து ஏற்கனவே ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டதாகவும், 4 வருடங்களுக்குப் பிறகு தான் இங்கு வந்தது விஜய்க்கு உதவுவதற்காக இல்லை என்றும் தெரிவித்தார். தவெகவிற்கு தேர்தல் வியூகம் வகுக்க தான் வரவில்லை என்றும், அது அவர்களுக்கு தேவையும் இல்லை என்றும் கூறினார்.

எந்த அரசியல் தலைவருக்காகவும் நான் வேலை செய்யப் போவதில்லை என்று தெரிவித்திருந்தேன், ஆனால் விஜய் ஒரு தலைவர் இல்லை என கூறி தொண்டர்களை பதற வைத்த அவர், என்னைப் பொறுத்தவரை எனது நண்பர், சகோதரர் விஜய் ஒரு அரசியல் தலைவர் இல்லை, அவர் தமிழ்நாட்டின் நம்பிக்கை என கூறி, பதறிய அதே தொண்டர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.

மேலும், அதற்காகவே தாம் இங்கு வந்ததாகவும், தன்னைப் பொறுத்தவரை, தவெக ஒரு கட்சி அல்ல, தமிழ்நாட்டில் புதிய அரசியல் களத்தை தொடங்கி வைக்க வந்த, லட்சக்கணக்கானோர் அடங்கிய ஒரு இயக்கம் என தெரிவித்தார் பிரஷாந்த் கிஷோர். அதோடு, தமிழ்நாட்டில் மாற்றத்திற்கான ஒரு அறிகுறி தெரிவதாகவும், அந்த மாற்றத்தை தவெகதான் கொடுக்கப்போகிறது, அதற்காகவே நான் இங்கு வந்தேன் எனவும் அவர் கூறினார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.