Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தவறான சேர்க்கை: கருக்கலைப்பு செய்யப் போன இடத்தில் அதிர்ச்சி சம்பவம்!

On April 9, 2025
1f93fe9e-f8f1-40eb-93ca-fbeddaab1a0b
Share
உத்திரபிரதேச மாநிலத்தில் இருக்கும், பிரதாப் நகரில் ஒரு கர்ப்பிணி பெண்ணின் பிணம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி காவல்துறையின் விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. இறந்து போன பெண்ணின் கணவர் மஹ்பூல் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை செய்து வருகின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கின்றார். கணவர் வெளிநாட்டில் இருக்கும்போது மனைவி சக்னாஸ் பானுவுக்கு இர்பான் என்ற ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதில் அந்தப் பெண் கர்ப்பமாகி இருக்கிறார். தனியார் மருத்துவமனை ஒன்றில் அந்த சிசுவை கலைக்க இருவரும் சென்றுள்ளனர். கருக்கலைப்பு செய்த போது அந்த பெண்ணிற்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரை இழந்து இருக்கிறார். இதை அடுத்து ஹாஸ்பிடல் நர்ஸ் ஒருவருடன் சேர்ந்து இர்பான் இருசக்கர வாகனத்தில் பெண்ணின் பிணத்தை வைத்து எடுத்து வந்து ஒரு கோதுமை பண்ணையில் தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். சட்டவிரோதமாக கரு கலைப்பு செய்ததால் தற்போது சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது நடவடிக்கை எடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டுள்ளது. இர்ஃபான் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடன் உடந்தையாக இருந்த நர்ஸும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.