தமிழகத்தில் மீண்டும் கொரோனா..!

சென்னை, கோவையில் தலா 3 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேவையில்லாத அச்சம் வேண்டாம் என்று மக்களுக்கு சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
2020ஆம் ஆண்டை யாராலும் எளிதாக மறக்க முடியாது, கொரோனா எனும் நோய் சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பெரும்பாலானோரின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் குறைந்துள்ள போதிலும், அது இன்னும் உலகிற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் மீண்டும் கொரோன கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக கொரோனா என்ற பேச்சே இல்லாமல் இருந்த நிலையில், சமீப நாட்களாக கொரோனா செய்தி மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.
இந்தநிலையில், சென்னை, கோவையில் தலா 3 பேர் என மொத்தம் 6 பேருக்கு கொரோனா உறுதியானதையடுத்து, சிகிச்சை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா குறித்து தேவையில்லாத அச்சம் வேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
