Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தந்தையை அடித்த மகள்கள். தூக்கிட்டு தற்கொலை செய்த தந்தை!

On March 11, 2025
A-20--year-old-woman-was-killed-by-father-for-bein_1687979480252
Share

மத்திய பிரதேசத்தின் முரைனா மாவட்டத்தில் சிட்டி கோத்வாலி என்ற பகுதியில் ஹரேந்திர மௌர்யா என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் ஒரு எலக்ட்ரிக் மெக்கானிக் தொழிலாளியாக இருந்துள்ளார். இவருக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் கடந்த மார்ச் 1 ம் தேதி இவரது 2 மகள்களுக்கும் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து இவருடைய மனைவி இவரிடம் தான் தனது பெற்றோருடன் இருப்பதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார் என தகவல்கள் கிடைத்துள்ளது.

இதனால் மன அழுத்தம் அடைந்த ஹரேந்திரா தன்னுடைய வீட்டின் அறையில் பூட்டிக்கொண்டு தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது. அதில் ஹரேந்திராவை அவரது மனைவி பிடித்திருக்க 2 மகள்கள் அவரை மரத்தடியால் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. மேலும் அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா? என காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


https://www.instagram.com/reel/DHDGqIKt0rx/?igsh=MWs0d3llOHR6dGxhcw==

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.