Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தந்தையே தன் மகளை பாலியல் பலாத்காரம் செய்த அவலம்: உ பி யில் அதிர்ச்சி!

On June 7, 2025
n6675039761749314578878786082d4e1575033cf0ac0ad8c61d5d01631c5452184c3a94945e946f6626bcc
Share

உத்திரபிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமத்தில் 24 வயதுடைய மகளை அவரது வளர்ப்பு தந்தை பல மாதங்களாக பலாத்காரம் செய்த து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை மகள் கூறிய நிலையில் பின்னர் இருவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் பல மாதங்களாக தன்னுடைய வளர்ப்பு தந்தையால் உடல் மற்றும் மனரீதியாக சித்திரவதை அனுபவித்ததாக கூறியுள்ளார். தன்னுடைய தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் தந்தை பாலியல் பலாத்காரம் செய்வதாகவும் பயத்தில் இது பற்றி இவ்வளவு நாள் வெளியே கூறாமல் இருந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

அதோடு பாதிக்கப்பட்ட பெண் தன்னுடைய வளர்ப்பு தந்தையை தூக்கில் போடுங்கள் என கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டார். கடந்த 20 வருடங்களுக்கு முன்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அந்த நபரை திருமணம் செய்து கொண்டார்.

அவரின் பெயர் புர்லால். தன்னுடைய இரண்டாவது கணவர் மூலமாக அந்த பெண்ணுக்கு ஒரு மகள் மற்றும் இரு மகன்கள் இருக்கும் நிலையில் முதல் கணவனின் மகளுக்கு மட்டும் புர்லால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அந்த நபரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.