டிஜிட்டல் மயமாகும் டாஸ்மாக்! மது பிரியர்கள் மகிழ்ச்சி.

தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,829 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. இது தமிழக அரசு கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. காலை 12 மணி முதல் திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டு தோறும் 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கிறது.
மேலும் தமிழகம் முழுவதும் ஒரு நாளைக்கு மட்டும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் ஒரு பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக பல வீடியோக்கள் மூலமும் புகார்கள் பரவியது. இந்த கூடுதல் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக,
டாஸ்மாக் கடைகளில் உற்பத்தி முதல் விற்பனை வரை கண்காணிக்க அனைத்து மதுபான கடைகளிலும் கணினிமயமாக்கப்பட்ட முறையை நடைமுறைப்படுத்த உள்ளது. இந்த டிஜிட்டல் முறையின் மூலம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் QR ஸ்கேன் செய்ய முடியும்.
இந்த டிஜிட்டல் முறையை வருகிற ஏப்ரல் 1 ம் தேதி முதல் விரிவுபடுத்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே தற்போது ராணிப்பேட்டை, ராமநாதபுரம் மாவட்ட மதுபான கடைகளில் இந்த கணினி முறை செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
