Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சென்டிமெண்டான நேரத்தில் டீசரை வெளியிட திட்டமிட்டிருக்கும் வெங்கட் பிரபு படக்குழுவினர்...

On March 14, 2023
IMG-20230314-WA0013
Share

பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களைத் தரக்கூடிய இயக்குநரான வெங்கட் பிரபு இயக்கத்தில் அக்கினேனி நாக சைதன்யாவின் தெலுங்கு-தமிழ் இரு மொழி திரைப்படமான 'கஸ்டடி' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. படக்குழு தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை மும்முரமாக கவனித்து வருகிறார்கள் . சமீபத்தில், படத்தில் இருந்து வெளியான கதாபாத்திர போஸ்டர்கள் பார்வையாளர்களிடையே படம் குறித்தான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.

இன்று, படக்குழு மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் சென்டிமென்ட் கலந்திருப்பதாக தெரிகிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் படத்தின் டீசர் மார்ச் 16 ஆம் தேதி மாலை 4:51 மணிக்கு வெளியிடப்படும். முன்பு நம் குறிப்பிட்டுள்ள அந்த சென்டிமென்ட் என்னவென்றால், டீசர் வெளியீட்டு நேரமான மாலை 4:51 மணி என்பது தான் அந்த சென்டிமென்ட். இதை அறிவித்ததோடு படக்குழு ஒரு சுவாரஸ்யமான க்ளிம்ப்ஸையும் வெளியிட்டுள்ளனர். இது டீசருக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ஸ்டைலான பின்னணி இசை, பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் படத்தின் பலத்தை மேலும் கூட்டும்படி அமைந்துள்ளது. இதிலிருந்து, 'கஸ்டடி' டீஸர் இன்னும் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்குத் தர இருக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டியும், ஒரு பவர்ஃபுல்லான ரோலில் ப்ரியாமணியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தில் அரவிந்த் சாமி, சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கினேனியின் கரியரில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் 'கஸ்டடி'யும் ஒன்று என சொல்லலாம்.

பிரமாண்டமான கேன்வாஸில் எடுக்கப்பட்ட இப்படம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்கும் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார்.

'கஸ்டடி' திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இசையமைக்க, எஸ்.ஆர்.கதிர்
ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ராஜன், படத்தொகுப்பினை கையாண்டுள்ளார். டி.ஒய் சத்யநாராயணா கலை இயக்குநராக பணியாற்ற, ஸ்டண்ட் சிவா மற்றும் மகேஷ் மேத்யூ சண்டை காட்சிகளை அமைத்துள்ளனர்.

இப்படத்தின் வசனத்தை அபூரி ரவி எழுத, கதை, திரைக்கதையை எழுதி இயக்கியுள்ளார் வெங்கட் பிரபு. பவன் குமார் இப்படத்தினை வழங்க, ஸ்ரீனிவாசா சித்தூரி, ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரில் தயாரித்துள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.