Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் படத்தை இயக்கி தயாரிக்கும் பிரபல இயக்குனர்...

On November 21, 2022
Vaazhai Poojai
Share

நவி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ் தயாரிக்க, டிஸ்னி + ஹோட்ஸ்டார் மற்றும் நவி ஸ்டூடியோஸ் வழங்கும், “வாழை” திரைப்படம் இன்று இனிதே துவங்கியது. இப்படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே அழுத்தமான படைப்பாளியாக அனைவராலும் பாராட்டப்பட்ட இயக்குநர் மாரி செல்வராஜ் தற்போது தயாரிப்பாளராகவும் களமிறங்கியுள்ளார். “பரியேறும் பெருமாள், கர்ணன், வெற்றிப்படங்களை தொடர்ந்து, தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் “மாமன்னன்” படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ், அவரது நான்காவது திரைப்படமாக “வாழை” படத்தை, அவரே தயாரித்து இயக்குகிறார். தற்போது நடிகர் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் “மாமன்னன்” படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் “வாழை” படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே துவங்கியது.

இப்படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்து கொள்ள, இன்று இனிதே துவங்கியது. இந்நிகழ்வில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, படத்தின் படப்பிடிப்பை க்ளாப் அடித்து துவக்கி வைத்தார்.

சிறுவர்கள் முதன்மை பாத்திரத்தில் நடிக்க சிறுவர் சினிமாவாக இப்படம் உருவாகிறது. மேலும் இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில் படப்புகழ் பிரியங்கா முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர் நடிகையர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழுவினர் தெரிவித்தனர்.

இயக்குநர் மாரி செல்வராஜ் தயாரித்து, எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுகபாரதி, வெயில் முத்து பாடல்கள் எழுத இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். குமார் கங்கப்பன் கலை பணியை கையாள, தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, சூரிய பிரதமான் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். நவி ஸ்டூடியோஸ் பேனரில் திவ்யா மாரி செல்வராஜ் மற்றும் மாரி செல்வராஜ் இப்படத்தினை இணைந்து தயாரிக்கின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.