Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சம்பாதித்து விட்டு தான் வருவோம் என்று வீட்டை விட்டு கிளம்பிய பெண்கள் பிணமாக கிடந்த அவலம்!

On July 25, 2025
n67392588117534173426401e46b59a36d8728ba1478812ff81ad7ff7f95646b15209a3be29afe88b6fdf12
Share

உலகின் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைப்பெற்று காெண்டுதான் இருக்கின்றன.

பெண்கள், காரணம் தெரியாமல் காணாமல் போவதும், அவர்களை தேட அதிகாரிகள் அலட்சியம் காண்பிப்பதும் புதிதல்ல. கணவர்கள், தங்கள் மனைவியை எப்படி தினுசு தினுசாக டார்ச்சர் செய்யலாம் என்று யோசிக்க, மாமியார்கள் எப்படி வன்கொடுமை செய்யலாம் என்று யோசிக்கின்றனர். தற்போது, இந்தியாவில் காணாமல் போன இரண்டு டீன்-ஏஜ் சகோதரிகள் வீட்டில் பிணமாக கிடந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பையில், நேபாளத்தை சேர்ந்த இரண்டு சகோதரிகள் சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயிருகின்றனர். இவர்களின் பெயர், மேனுகா கண்டேல் என்றும், சிர்ஜானா என்றும் கூறப்படுகிறது. இதில், மேனுகாவிற்கு 16 வயதும், சிரிஜானாவிற்கு 13 வயதும் ஆகிறது. இவர்களின் குடும்பம் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருந்திருக்கின்றனர். இவர்கள் இருவரும், நேபாளின் பக்தாபூர் எனும் இடத்தில் இருந்த ஒரு வாடகை வீட்டிற்குள் இருந்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல், கழுத்தில் நைலான் கயிற்றால் சுற்றிய நிலையில், வீட்டில் இருந்த ஒரு இரும்பி கம்பியில் தொங்கி கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

போலீசாரின் கூற்றின் படி, இந்த இரு சிறுமிகளும் 15 நாட்களாக தாங்கள் மாணவிகள் என வீட்டு உரிமையாளரிடம் சொல்லிவிட்டு இருந்திருக்கின்றனர். இவர்களின் உடலை மீட்க, பெற்றோர்கள் இந்தியாவில் இருந்து வந்து கொண்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சிறுமிகளும், சில நாட்களுக்கு முன்பு கம்பியூட்டர் கிளாஸ் செய்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு கிளம்பியிருக்கின்றனர். அதன் பிறகு, சில மணி நேரம் கழித்து அவர்களின் இளைய மகள் தன் பெற்றோர்களுக்கு ஒரு வாய்ஸ் நோட்டை அனுப்பியிருக்கிறார். அதில், தாங்கள் பெங்களூருவுக்கு செல்வதாகவும், வருவதற்கு சில காலங்கள் ஆகும் என்றும் கூறியிருக்கிறார். தாங்கள் பணம் சம்பாதித்து விட்டுதான் திரும்புவோம் என்றும் கூறியிருக்கின்றனர். இதனால் ஷாக் ஆன பெற்றோர், அவர்களை அனைத்து இடத்திலும் தேடி வந்திருக்கின்றனர்.

தங்களது பிள்ளைகளை, யாரோ கட்டாயப்படுத்தி அல்லது ஏமாற்றி அவர்களுடன் அழைத்து சென்றிருக்கலாம் என்று பெற்றோர் சந்தேகித்தனர். இதையடுத்து பெற்றோருக்கு, காத்மாண்டுவில் இருக்கும் ஒரு ஹோட்டலில் இவர்களின் மகள்கள் வேலை பார்த்து வருவதாக தகவல் கிடைட்துள்ளது. ஆனால் எங்கு என்று தெரியவில்லை.

வீட்டை விட்டு ஓடி வந்த இரண்டு டீன்-ஏஜ் சிறுமிகள், இப்படி வீட்டிற்குள் பிணமாக கிடந்த விஷயம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டனரா, அல்லது வேறு ஏதனும் காரணம் இருக்க கூடுமா என்கிற நோக்கில் போலீஸார் தற்பாேது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.