Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சந்தேகத்தின் பேரில் அழைத்துச் செல்லப்பட்ட பெண்ணை 20 மணி நேரம் நிர்வாணமாக நிப்பாட்டி கொடுமைப்படுத்திய அவலம்: கேரளாவில் பரபரப்பு!

On May 21, 2025
WhatsApp Image 2025-05-20 at 23.27.26
Share

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியில் 39 மதிக்கத்தக்க பின் ஒருவர் வசித்து வருகிறார். இவர் இஷா என்பவருடைய வீட்டில் வீட்டு வேலை செய்து காலத்தை தள்ளுகிறார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி வழக்கம் போல் ஈஷா வீட்டிலிருந்து வேலையை முடித்துவிட்டு தன்னுடைய வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தார்.

இவர் பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அவருக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்தது.

அதில் பேசியவர் போலீஸ்காரர் எனக்கூறிய நிலையில் நீங்கள் வேலை பார்க்கும் வீட்டில் ஐந்து சவரன் தங்க நகைகள் காணாமல் போனதாகவும் உங்கள் மீது சந்தேகம் இருக்கிறது எனவும் கூறியுள்ளார். இதனால் பயந்து போன அந்த பெண் உடனடியாக போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற நிலையில் அங்கிருந்த பெண் போலீசார் அந்த பெண்ணை நிர்வாணப்படுத்தி சோதனை செய்துள்ளனர்.

அந்தப் பெண் தான் திருடவில்லை எனக் கூறியும் இரவு முழுவதும் விசாரணை நடத்தியதோடு சாப்பாடு எதுவும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் போலீஸ் ஸ்டேஷனில் அந்த பெண்ணை வைத்த நிலையில் மறுநாள் புகார் கொடுத்தவர் தங்கச் சங்கிலி கிடைத்துவிட்டதாக போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்த நிலையில் அந்தப் பெண்ணை அங்கிருந்து அனுப்பி உள்ளனர்.

ஆனால் அந்த பெண்ணிடம் எந்த விவரத்தையும் கூறாமல் திட்டி அனுப்பியதோடு நாங்கள் கூறும்போது எல்லாம் விசாரணைக்கு வரவேண்டும் என போலீஸ்காரர்கள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அந்த பெண்ணின் குடும்பத்தினர் முதலமைச்சர் மற்றும் டிஜிபி ஆகியோருக்கு புகார் கொடுத்த நிலையில் அவர்கள் விசாரணை நடத்தி பேரூர் கடைசி இன்ஸ்பெக்டர் பிரசாத்தை பணியிடை நீக்கம் செய்தார்.

ஆனால் அந்தப் பெண் விசாரணையில் திருப்தி இல்லை என கூறியதோடு தன்னை நிர்வாணப்படுத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் 20 மணி நேரத்திற்கு மேலாக அந்த பெண் போலீஸ் ஸ்டேஷனில் சித்திரவதை அனுபவித்த நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.