Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

காணி நிலத்துக்காக பள்ளி சிறுவன் சிறுமியை கொன்ற கொடூரம்

On October 15, 2024
WhatsApp Image 2024-10-15 at 22.49.59
Share
சேலம் மாவட்டத்தில் உள்ள பனைமரத்துப்பட்டி, தும்மல்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் ராஜ். இவர் விவசாயியாக இருக்கிறர். இவருக்கு 17 வயதுடைய ப்ரவீனா என்ற மகள், 15 வயதுடைய சுகன் என்ற மகன் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் கொல்லப்பநாயக்கனூர் அரசுப்பள்ளியில் படிக்கின்றனர். இருவரும் நேற்று பள்ளிக்குச் சென்றுவிட்டு, பின் மீண்டும் வீட்டிற்கு வரும்போது, அவர்களை வழிமறித்த தனசேகர், ஒருவன்காடு பகுதியில் இருவரையும் வெட்டிக்கொலை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இவர்களுடன் வந்த ராஜுவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பனைமரத்துப்பட்டி காவல்துறையினர், பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இருவரின் நிலங்களும் அடுத்தடுத்து உள்ள நிலையில், நிலத்தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என தெரியவருகிறது. தலைமறைவான தனசேகரை காவல் துறையினர் தேடி வரும் நிலையில், இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது. இதனால் பதற்றத்தை தவிர்க்க காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.