Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கள்ளக்காதல் விபரீதம் : கணவனை சுடு தண்ணீர் ஊற்றிக் கொன்ற மனைவி!

On December 31, 2024
n6456488841735656137958ba33879449e2a157e7630e802220abf01af5695cc7d8c8bc1c554d8b064ca863
Share

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள லாலாபேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்க்கிறார்.

இவரது மனைவி அமராவதி அடிக்கடி தனது ஆண் நண்பர்களுடன் செல்போனில் பேசினார். இதனால் கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது. அமராவதியின் நடத்தை பிடிக்காததால் சுரேஷ் அவரை கண்டித்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த அமராவதி தூங்கிக் கொண்டிருந்த தனது கணவர் மீது சுடு தண்ணீரை ஊற்றினார். இதனால் படுகாயங்களுடன் அலறி துடித்த சுரேஷை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.