கள்ளக்காதலனுடன் வசமாக மாட்டிக் கொண்ட மனைவி : 13 அடி மேற்கூரையிலிருந்து தப்பிச் சென்ற பரிதாபம்!

உத்தரபிரதேச மாநிலம் பாக்பத்தில், ஒரு பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் இருந்த நிலையில் அவரது கணவர் போலீசாரை அழைத்ததால், அந்தப் பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரோட் கோட்வாலி பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், ஹாலிடே ஹோட்டலில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
தகவலின்படி, அந்தப் பெண் சப்ரௌலி காவல் நிலையப் பகுதியில் வசிப்பவர். கணவன்-மனைவிக்கிடையில் அடிக்கடி தகராறுகள் நடைபெற்று வந்துள்ளன. இதனால்
அந்த பெண் தனது காதலனுடன் ஹோட்டலில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அந்த பெண்ணின் கணவர் தனது மனைவியை ரகசியமாக பின்தொடர்ந்தார். பின்னர், 112 என்ற எமர்ஜென்சி எண்ணை அழைத்து போலீசாரை அழைத்தார்.
போலீசார் ஹோட்டலுக்குள் நுழைந்ததும், பெண் பயந்துபோய் சுமார் 12-13 அடி உயரமுள்ள ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பினார். இந்த சம்பவத்தின் வீடியோ ஹோட்டலின் சிசிடிவி மற்றும் ஒரு வழிப்போக்கரால் பதிவுசெய்யப்பட்டது.
தற்போது அந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக வைரலாகியுள்ளது. வீடியோவில், அந்தப் பெண் கூரையில் இருந்து கீழே குதித்து ஓடி செல்வது தெளிவாகக் காணப்படுகிறது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஹோட்டல் நிர்வாகம் அந்த நபர்களிடம் அடையாள அட்டை கேட்டதா? இல்லையா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
https://x.com/News1IndiaTweet/status/1934881592314310876?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1934881592314310876%7Ctwgr%5E88f64b19c389a7eacee8cb4c7d10692ed8b0e126%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fm.test.in%2F
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
