Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கடலில் மூழ்கிய பயிற்சி மருத்துவர்கள்! அரசு அதிகாரிகளை கிழித்து தொங்கவிட்ட விஷால் மேனேஜர்!

On May 6, 2024
Trainee Doctors drown in Kanyakumari Sea
Share

கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் குளிக்க சென்ற திருச்சி SRM மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் எட்டு பேர் கடலில் அடித்து செல்லப்பட்டனர். அவர்கள் கடலில் அடித்து சென்ற போது அங்கு நடிகர் விஷாலின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவருடைய உறவினர்கள் இருந்துள்ளனர்.


இதை பற்றி ஹரிகிருஷ்ணன் பத்திரிகை அறிக்கை வெளியீட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பித்துள்ளதாவது, “கன்னியாகுமரி மாவட்டம் லெமூர் கடற்கரையில் குளிக்க சென்ற திருச்சி SRM மருத்துவ பயிற்சி மருத்துவர்கள் எட்டு பேர் அடித்து சென்ற போது அருகில் இருந்த எங்களால் (என் தம்பி சரவணன், பாரத், ராஜா குடும்ப நண்பர்கள் அனைவரும்) முடிந்தவரை நான்கு பேரை கரைக்கு கொண்டு வந்தோம் அதில் ஒருவர் மட்டும் கரை சேர்த்தும் அவர் இறந்து விட்டார். மற்ற நான்கு பேரில் ஒரு பெண் பல மணி நேரம் போராடினால் அவளுடைய போராட்டமும் எங்களுடைய போராட்டமும் பயணளிக்கவில்லை. நாங்கள் முயற்சி செய்தும் கண்ணெதிரே காப்பாத்த முடியாமல் நான்கு பேரும் இறந்தார்கள், இதயம் கனக்கிறது. எங்களால் முடிந்த வரை மூன்று பேரை காப்பாற்ற முடிந்தது, அரசு அதிகாரிகள் கை கொடுத்திருந்தால் அனைவரையும் காப்பாத்திருப்போம். இதற்கு அப்போது நாங்கள் தொடர்புகொண்ட அவசர சேவை மீட்பு பணி அனைவரும் நிராகரித்தார்கள். வந்த காவல் துறையும் கைவிட்டார்கள் மக்களை காப்பாற்றும் அரசும் கட்டமைப்பும் ஊனமாக இருக்கிறது இதயம் கனக்கிறது.

சுற்றுலா பயன்பாட்டிற்கு என்று இருந்தும் எந்த ஒரு அபாய அறிவிப்பு பலகையும் இல்லை, கடலோர பாதுகாப்பு படையும் இல்லை, மீட்பு பணி குழுவும் இல்லை இதுவரை அப் பகுதியில் நாற்பதுக்கும் மேல் கடலலை இழுத்து சென்று பதினைந்து பேருக்கு மேல் இறந்துள்ளார்கள் என்பது வருத்தமாக உள்ளது. மக்களை பாதுகாக்கும் மேற்கொண்ட எந்த பணியும் செயல்படுத்தவில்லை என்பது வருத்தமாக உள்ளது.

திரைப்படத்தில் தான் பார்த்திருக்கிறோம் இறுதியில் முடிந்த உடன் அனைவரும் வருவது, அதே போல் இதிலும் காவல்துறை அதிகாரிகள், RDO அதிகாரி, உயர் அதிகாரிகள், தீயணைப்பு படை வீரர்கள் அனைவரும் வந்தும் எந்த பயனும் இல்லை.” என விஷால் மேனேஜர் ஹரிகிருஷ்ணன் தனது பத்திரிகை அறிக்கையில் அரசையும், அரசு அதிகாரிகளையும் கிழிக்கும் விதமாக குறிப்பிட்டுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.