Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒற்றைக் காட்சியினை விளக்கும் முழு படம் உன் காதல் இருந்தால்

On March 2, 2020
Srikanth
Share

'மரிக்கார் ஆர்ட்ஸ்' முதல் முதலாக தமிழில் "உன் காதல் இருந்தால்" என்ற படத்தை தயாரிக்கிறார்கள். தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்காரே இப்படத்தை டைரக்ட் செய்கிறார்.

'உன் காதல் இருந்தால்' என்று படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் படத்தின் கதைக்கும், பெயருக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. எதிர்மறை பாத்திரங்களை இயக்குவது இதுவே முதல் முறை. ஒவ்வொரு 15 நிமிடங்களும் ஒவ்வொரு விதமாக நகரும்.

படத்தின் கதைக்கரு மூன்று நிறத்தில் முற்றிலும் வேறு மாதிரியானதாக இருக்கும். இப்படம் உளவியல் திரில்லர். பார்வையாளர்களுக்கும், படத்திற்கும் உளவியல் இருக்கும். திரில்லர் படத்தில் இருக்கும். அதேபோல், ஹாரர், நகைச்சுவை, குடும்ப உறவுகள், காதல் என்று பல திருப்பங்கள் நிறைந்திருக்கும். மேலும், இந்த படத்தில் ஒரே ஒரு காட்சி தான். அந்த ஒற்றைக் காட்சியின் விளக்கம் தான் முழு படம். அது தான் இந்த படத்தின் சிறப்பு.


இப்படத்தில் ஸ்ரீகாந்த் நாயகனாகவும், அவருடன் 3 நாயகிகளும் நடிக்கிறார்கள். சந்திரிகா ரவி, லெனா, ஹர்ஷிகா பூனாச்சா ஆகியோர் நடிக்கிறார்கள். ரியாஸ்கான் முதல்முறையாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கஸ்தூரி இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மக்பூல் சல்மான், வையாபுரி, சிராக் ஜானி, ஜென்சன், கிரேன் மனோகர், சோனா ஹைடன், சிரியா ரமேஷ், சாக்ஷி திவிவேதி, மற்றும் காயத்ரி ஆகியோரும் நடிக்கிறார்கள். "உன்காதல்இருந்தால்" படத்திற்காக 1000-க்கு மேல் சிகரட் ஊதி தள்ளினார் ‘கடாரம்கொண்டான்’ நடிகை #லெனா. இவரது காரக்டர் அமைப்பு அப்படி உள்ளது.


இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியிருப்பது தயாரிப்பாளர் ஹாசிம் மரிக்கார். சாஜித் மேனன் ஒளிப்பதிவு செய்ய, சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். மன்சூர் அஹ்மத் இசையில் அந்தோணி தாசன், கார்த்திக் மற்றும் மானஸி பாடியுள்ளார்கள். பின்னணி இசையமைத்திருப்பது ஸ்ரீகாந்த் தேவா. இம்மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.