Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரே போஸ்டரில் அஜித், அண்ணாமலை: மதுரையில் அலப்பறை!

On April 9, 2025
WhatsApp Image 2025-04-09 at 22.20.41
Share

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தற்போது குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அப்படம் வருகிற 10-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் எப்போதுமே அவர் அரசியலுக்கு வரவேண்டும் விரும்பும் நிலையில் அவர் ஒருபோதும் அரசியலுக்கு மட்டும் வரமாட்டார் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இதனை மனதில் வைத்து அவருடைய ரசிகர்கள் அதைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.‌

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் தற்போது நடிகர் அஜித்குமார் மற்றும் அண்ணாமலையின் போட்டோவை ஒன்றாக சேர்த்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்திடீங்க. இனி தமிழ்நாட்டிற்கு எப்போது பெருமை சேர்க்க போகிறீர்கள் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது.

மேலும் விஜய் புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் அஜித்தை தங்கள் பக்கம் இழுக்க பாஜக மற்றும் திமுக முயற்சி செய்வதாக ஏற்கனவே ஒரு கருத்து அடிபடும் நிலையில் தற்போது அண்ணாமலை மற்றும் அஜித்குமாரை சேர்த்த போஸ்டர்கள் ஒட்டியது பரபரப்பாக பேசப்படுகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.