Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரே ஒரு சண்டை.. நூதனத் திருட்டை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பெண்மை.. குவியும் பாராட்டுகள்!

On June 9, 2025
n6677827081749480033735bbb74a8c6dce4ea404da6e2f7d38e6b968487729be81e83b62d7de7f7a9207ac
Share

உத்திரபிரதேச மாநிலம் உண்ணாவ் மாவட்டம், அவ்ராஸ் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு தம்பதியினரிடையே நடைபெற்ற சண்டை மிகப்பெரிய சட்டவிரோத எரிபொருள் வணிகத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.


அதாவது நூர்ஹாசன் என்ற நபர், தனது வீட்டில் திருடப்பட்ட டீசல் மற்றும் பெட்ரோலை பதுக்கி விற்பனை செய்து வந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம், அவரது மனைவி அமினா போலீசாரிடம் தகவல் வழங்கியதன் அடிப்படையில் வெளிச்சத்திற்கு வந்தது.

மினா, டயல் 112-ஐ அழைத்து, தனது கணவர் நூர்ஹாசன் கடந்த 10 ஆண்டுகளாக ஹர்தோய்-லக்னோ நெடுஞ்சாலையில் லாரி மற்றும் டேங்கர்களிடமிருந்து திருடப்படும் டீசல் மற்றும் பெட்ரோலை வாங்கி, அதை கிராமத்தில் விற்பனை செய்து வருவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்தார். இதையடுத்து, எஸ்.ஐ. பவன் சிங் மௌரியா தலைமையிலான போலீஸ் குழு, நூர்ஹாசனின் வீட்டில் சோதனை மேற்கொண்டது.

சோதனையின் போது, வீட்டின் பின்னே பதுக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து 9 டிரம்களில் வைத்திருந்த 300 லிட்டர் பெட்ரோல் மற்றும் 190 லிட்டர் டீசலை போலீசார் மீட்டனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசாரிடம், நூர்ஹாசன் தனது சட்டவிரோத வர்த்தகத்தை 10 ஆண்டுகளாக செய்து வருவதாக ஒப்புக்கொண்டார். இதன் அடிப்படையில், ஹசன்கஞ்ச் சப்ளை இன்ஸ்பெக்டர் தினேஷ் யாதவ், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். நூர்ஹாசனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தற்போது கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. "இத்தனை ஆண்டுகளாக நடந்து வந்த துஷ்டச் செயலுக்கு ஒரு மனைவியின் தைரியமான தகவல் மூலம் முடிவுவந்தது" என்று பொதுமக்கள் பாராட்டுகின்றனர். மேலும் இந்த வழக்கில்வேறு யாருக்கு என்னும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.