Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இரவில் தூங்கச் சென்றவர் காலையில் பிணமாக கிடந்த அவலம்: உபியில் அதிர்ச்சி!

On April 17, 2025
WhatsApp Image 2025-04-16 at 23.47.28
Share

மிக்கி என அழைக்கப்படும் 30 வயதுடைய அமித் என்ற இளைஞர், சனிக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பி இரவு உணவுக்குப் பிறகு வழக்கம்போல் தூங்கச் சென்றார். ஆனால் ஞாயிறு காலை 5.30 மணியளவில் அவரது குடும்பத்தினர் அவரை எழுப்ப வந்த போது, அவர் அசையாத நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவரை எழுப்ப முயற்சி செய்த போது, அவரது உடலின் கீழே ஒரு பாம்பு சுருண்ட நிலையில் இருப்பதும், உடலில் பத்து பாம்பு கடி காயங்கள் இருப்பதும் தெரிய வந்தது.

இந்த சோகமான காட்சியை கண்ட குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கூச்சலிட்டனர். இதையடுத்து அண்டை வீட்டு வாசிகள் ஓடி வந்து பார்வையிட்டனர். மஹ்மூத்பூர் சிகேடா என்ற இடத்திலிருந்து அழைக்கப்பட்ட பாம்பு பிடிப்பவர் பாம்பை பிடித்து சென்றார். அமித் தொழிலாளராக வேலை செய்து வரும் உழைப்பாளர் என்றும், அவருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்றும் கிராம மக்கள் கூறினர். "அவரால் இப்படியொரு துயரமான முடிவை எதிர்பார்க்க முடியாது" என அவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தினர் உடனடியாக அமித்தை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் அவர் அங்கு சென்றதும் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.