அகடு திரைவிமர்சனம்

அகடு திரை விமர்சனம்
இயக்குநர் - S சுரேஷ் குமார்
நடிகர்கள் - ஜான் விஜய், சித்தார்த், ஶ்ரீராம், அஞ்சலி நாயர்
கதை - சுற்றுலாவிற்கு செல்லும் இடத்தில் ஒரு குடும்பம் அங்கு வந்திருக்கும் இளைஞர்களுடன் பழகுகிறது. மறுநாள் அவர்களின் பெண்குழந்தையும், ஒரு இளைஞனையும் காணவில்லை. அந்த பெண் குழந்தைக்கு என்ன ஆயிற்று என்பதை துப்பறிவதே கதை.
ஒரு கதையை சொல்லும் போது அந்தக்கதை எதற்கு சொல்லப்படுகிறது அதன் அர்த்தம் என்ன என்பது முக்கியம். ஒரு கதை திரையில் எவ்வாறு வரும் என்பதும் மிக முக்கியம். இந்தப்படம் ரசிகர்களை மகிழ்விக்க மட்டும் என்றால், அதற்கான கமர்ஷியல் அம்சங்களாவது படத்தில் இருக்க வேண்டும். இந்தப்படத்தில் படம் என்ன சொல்ல வருகிறது என்கிற கருத்தே விகாரமாக இருக்கிறது
ஒரு கொலை நிகழ அதனை யார் செய்தது, உண்மையில் என்ன நடந்தது என்பதை சுவாரஷ்யமாக சொல்ல முயன்றிருக்கிறார்கள். ஆனால் அந்த சுவாரஷ்யம் ரசிகர்களிடம் சுத்தமாக கடத்தப்படவில்லை, திரைப்படத்திற்கென்றே ஒரு மிகப்பெரும் பரப்பு இருக்கிறது, அது திரையில் சரிவர எங்குமே பயன்படுத்தப்படவில்லை.
கதையும் கதையின் நடிகர்களும் ஒரு நாடகத்தை பார்க்கும் உணர்வைத் தான் தருகிறார்கள். படத்தின் மேக்கிங்கும் ஒரு டீவி நாடகத்தையும் மேடை நாடகத்தையும் பார்ப்பது போலவே இருக்கிறது. கதையின் காட்சிகளிலும் எந்த சுவாரஷ்யமும் ஏற்படவில்லை. அதிலும் படத்தின் க்ளைமாக்ஸ் நமக்கு பெருத்த ஏமாற்றத்தை தருகிறது. உண்மையிலேயே இந்த க்ளைமாக்ஸ் தேவை தானா ? பெண்களை இத்தனை கேவலப்படுத்த வேண்டிய அவசியம் தான் என்ன?
படத்தில் விஜய் டீவி சித்தார்தும் மேலும் சில நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் யாருடைய நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும்படி சிறப்பாக இல்லை. அஞ்சலி நாயரும், ஜான் விஜய்யும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கிறார்கள்.
படத்தில் லாஜிக் எல்லா இடத்திலும் இடிக்கிறது. ஒரு கொலை கேஸை போலீஸ் இவ்வளவு கேவலமாகவா விசாரிக்கும். படத்தில் ஒளிப்பதிவு, மற்றும் இசை கொஞ்சம் பலமாக அமைந்துள்ளது. மொத்தமாக படத்தின் மேக்கிங் படத்தை பின்னுக்கு இழுக்கிறது.
எந்த சுவார்ஷ்யமும் இல்லாத எந்தக்கருத்தையும் சொல்லாத சினிமா இந்த அகடு
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
