ஹாரிஸ் ஜெயராஜை நக்கலடித்த யுவன் ஷங்கர் ராஜா:

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் 5’வது, யுவன் இசையில் 100’வது என்று டிசம்பர் 20 அன்று வெளிவரவிருக்கும் திரைப்படம் "பிரியாணி". இந்த திரைப்படத்தில் கார்த்தி கதாநாயகனாகவும், ஹன்சிகா மோத்வாணி கதாநாயகியாக நடிக்கிறார்கள். லண்டனில் வளர்ந்த பஞ்சாபி பட நாயகி மாண்டி தக்கர் இளைஞர்கள் மனதில் மயக்கம் ஏற்படுத்தும் கவர்ச்சி பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் ராம்கி, பிரேம்ஜி, சம்பத்ராஜ், நாசர், ஷண்முக சுந்தரம் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு இன்று (டிசம்பர் 04, 2013) சென்னை ராடிசன் ப்ளு ஹோட்டலில் நடைபெற்றது. கேள்வி நேரத்தின் போது ஒரு நிருபர் யுவனிடம் நீங்கள் இந்த திரைப்படத்தில் உங்கள் தனித்திறமையை எப்படி வெளிப்படுத்திருக்கிரீர்கள்? தொலைக்காட்சி பேட்டியில் உங்களுக்கு விருப்பம் இல்லாத படங்களில் கூட இசை அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளீர்? இதற்கு பதில் அளிக்கும் விதத்தில் யுவன் ஷங்கர் ராஜா, இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை நக்கலடிக்கும்படி "நாங்க புதுசா போய் சைனால போய் ரெகார்ட் பண்ணோம், புது இன்ஸ்ட்ருமென்ட் இந்த கதைக்கு தேவைப்பட்டுது அந்த மாதிரி எதுவுமே இல்ல" என சொல்ல, பக்கத்தில் இருந்த இயக்குனர் வெங்கட் பிரபு குசும்பாக சிரித்தார்.
முன்பு ஏழாம் அறிவு திரைப்பட இசை வெளியீட்டு விழாவின் போது பேசிய அதன் இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தான் அந்த படத்திற்காக சீனா சென்று பல சீன இசை கருவிகளை தேடி வாங்கி அதில் அந்த படத்திற்காக இசை அமைத்ததாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியாணி திரைப்படத்தில் "மிசிசிப்பி மிசிசிப்பி" என்ற ஒரு பாடலில் வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஆசைப்படி இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷ், இமான், தமன் மற்றும் விஜய் ஆண்டனி பாடியுள்ளார்கள். ஐந்தாவதாக ஹாரிஸ் ஜெயராஜை இவர்கள் பாட அழைத்து அவர் மறுத்தாரோ என்னவோ, யுவன் ஹாரிசை மறைமுகமாக நக்கலடிக்க அருகில் இருந்த வெங்கட் பிரபு புரிந்து சிரித்தார்.
போங்க பா போங்க நீங்க எப்போவுமே இப்படி தான் தமாசு பண்றீங்க, உங்க கோபத்தை மறந்து இசையில் கவனிச்சீங்கனா மக்கள் உங்கள் இசையை நல்லா கவனிப்பாங்க இல்ல மக்கள் உங்க இசையை நக்கலடிப்பாங்க. பாத்து பிரதர்....
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
