இந்த மாசம் மட்டும் பொறுங்க - கோச்சடையான் யூனிட்!

ரஜினி ரசிகர்கள் மற்றும் தமிழ் சினிமா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கும் படம் கோச்சடையான். இந்த படத்தின் முதல் ட்ரைலர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியாகவில்லை. தற்போது இது குறித்து ட்ரைலர் இப்போ வரும், அப்போ வரும் என நிறைய வதந்திகள் பரவி வருகின்றன.
இதனால் இயக்குனர் சௌந்தர்யா இதற்கு முற்றுபுள்ளி வைக்க ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் " வெளியிலிருந்து வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். படத்தின் வேலைகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. விரைவில் ட்ரைலர் வெளியாகும் என்று கூறியுள்ளார்.
ரஜினியுடன் பெரிய நட்சத்திரப் பட்டாளம், இந்தியாவில் இதுவரை எந்தப் படத்திலும் உபயோகிக்கப்படாத 3டி மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம், ஹாலிவுட் மற்றும் சீன தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு, ரஹ்மானின் இசை என அனைத்து வகையிலும் உலகத் தரமான ஒரு படமாக கோச்சடையான் உருவாகி வருகிறது.. இந்த ஜூன் மாதத்துக்குள் எப்படியும் ட்ரைலர் வெளியாகிவிடும் என்று தயாரிப்பாளர் முரளி மனோகர் தெரிவித்துள்ளார்.
எந்திரனுக்குப் பிறகு மூன்றாண்டுகளாக ரஜினி படம் எதுவும் வெளியாகவில்லை. கோச்சடையான் படம் புதுமையான தொழில்நுட்பத்தில் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
