Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷால் படத்துக்கு அதிகரிக்கும் தியேட்டர் எண்ணிக்கை!

•On November 7, 2013
Pandiya-Nadu-Movie-Poster
Share
Pandiya-Nadu-Movie-Poster தீபாவளிக்கு வெளியான படங்களில் விஷாலின் பாண்டியநாடு படத்துக்கு குறைந்த அளவு தியேட்டர்களே கிடைத்தன. பெரும்பாலான தியேட்டர்களை அழகுராஜாவும், ஆரம்பமும் ஆக்கிரமித்திருந்தனர். படம் வெளியான பின்பு பெரும் பாராட்டுகளுடன் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் 250 திரையரங்குகளில் வெளியானது பாண்டியநாடு. வார நாட்களிலும் கூட 90 சதவீத ரசிகர்கள் வருவதால், இந்தப் படத்துக்கு கூடுதலாக அரங்குகளைத் தர தியேட்டர்காரர்கள் முன்வந்துள்ளனர். இதுவரை 75 அரங்குகள் இந்தப் படத்துக்குக் கூடுதலாகக் கிடைத்துள்ளன. கேரளாவில் பாலக்காட்டில் இந்தப் படம் வெளியாகியது. ரசிகர்கள் கொடுத்த வரவேற்பைப் பார்த்து, கேரளா முழுவதும் படத்தை வெளியிட்டுள்ளனர். தமிழகம் தவிர, ஆந்திரா மற்றும் கர்நாடகத்தில் பாண்டிய நாடு பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.