லீவு முடிஞ்சு 'ஜில்லா'விற்கு புறப்பட்ட விஜய்!

சமீபகாலமாக புதுமுக இயக்குனர்களை தவிர்த்து பெரிய இயக்குனர்களின் படங்களில் மட்டுமே நடித்து வந்த விஜய் தற்போது ஜில்லா படத்தில் புது இயக்குனர் நேசன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு பூஜை போடப்பட்ட ஜில்லா படத்தின் படத்தின் படப்பிடிப்பு இரண்டு வாரங்களுக்கு முன் தொடங்கியது. காரைக்குடி, மதுரை போன்ற இடங்களில் நடந்த படப்பிடிப்பில் மோகன்லாலும், பூர்ணிமா பாக்யராஜும் கலந்து கொண்டனர். தலைவா படத்தை முடித்துவிட்ட விஜய் இதுவரை ஓய்வில் இருந்தார்.
தற்போது சென்னையில் உள்ள மோகன் ஸ்டுடியோவில் ஜில்லாவுக்கு என பிரமாண்ட அரங்கு அமைத்திருக்கிறார்கள். அங்கு நடந்த படப்பிடிப்பில் விஜய் கலந்து கொண்டார். விஜய்யுடன் விஜய் தம்பியாக நடிக்கும் மகத்தும் கலந்து கொண்டிருக்கிறார்.
மோகன்லால், விஜய் காம்பினேஷன் காட்சிகள் இதுவரை படமாக்கபடவில்லை. ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்த படத்தில் காஜல் அகர்வால் ஹீரோயின். டி.இமான் இசையமைக்கிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
