Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

குத்துப்பாட்டு இல்லையே, வருத்தப்பட்ட விஜய்!!

•On November 26, 2013
Thalaivaa-Vijay2
Share
Thalaivaa-Vijay2 விஜய் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் நடனத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் இருக்கும். தனக்கு இணையாக ஆடக்கூடிய கதாநாயகிகளையே ஓ.கே செய்வார். ரசிகர்களை கவரும் வகையில் துள்ளலாக நடனம் அமைந்து இருக்கும். தலைவா படத்தில் குத்துப்பாட்டு போல ஒரு பாடலும் அமையவில்லை. இந்த நிலையில், பொங்கலுக்கு வருகிற ஜில்லா படம் எல்லா விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று மெனக்கெட்டுள்ளாராம் விஜய். இந்த படத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து பாடல் காட்சிகளில் பட்டைய கிளப்பும் அளவுக்கு வேகமாக நடனம் ஆடியிருக்கிறார். மொத்த படத்தையும் முடித்துவிட்டு பர்ஸ்ட் காப்பி பார்த்துவிட்டு, குத்துப்பாட்டு இல்லாதது குறித்து குறை பட்டாராம். அதை அவர் இயக்குனரிடம் சொல்ல, உடனே சுடச்சுட ஒரு குத்துப்பாட்டை ரெடி பண்ணி விட்டார்களாம். அதிரடியான பாடலாக அமைந்துள்ளதால் அதிரடியாக ஆடக்கூடிய நடிகையை தேடியபோது, இந்தி, தெலுங்கு படங்களில் குத்துப்பாட்டுக்கு நடனமாடி வரும் இங்கிலாந்து நடிகை ஸ்கேர்லட் வில்சன் கிடைத்துள்ளார். அதனால் ஒரு பெரிய தொகை கொடுத்து அவரை புக் பண்ணி இப்போது அந்த அந்த பாடலையும் படமாக்கி விட்டனர். இப்பாடலில் விஜய்க்கு இணையாக சூப்பர் குத்தாட்டம் போட்டிருக்கிறார் ஸ்கேர்லட் வில்சன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.