ஜப்பானில் டூயட் பாடும் விஜய்!!

சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படம் ஜில்லா. விஜய் - மோகன்லால் நடிப்பில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்படத்தை நேசன் இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் நாயகியாக நடிக்கிறார்.
பொங்கலுக்கு வெளியாக இருக்கும் இந்த படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்து விட்டது. தற்போது படத்தில் இடம் பெரும் பாடல் காட்சிகளுக்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். நிறைய தேடுதல்களுக்கு பிறகு ஜப்பானை தேர்வு செய்திருக்கிறார்கள்.
அங்கு தற்போது இனிமையான தட்ப வெட்பம் நிலவி வருவதால், விரைவில் அங்குள்ள ஒசாகா பகுதிக்கு சென்று விஜய் – காஜல் அகர்வால் பங்குபெறும் டூயட் பாடலை படமாக்குகிறார்களாம். அந்த டூயட் பாடல் விஜய் சொந்த குரலில் பாடிய பாடலாம். அதுமட்டுமின்றி, அவர்கள் சம்பந்தப்பட்ட சில ரொமான்ஸ் காட்சிகள் கூட ஜப்பான் தட்ப வெப்பத்தில் படமாகிறது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
