விக்னேஷ் – திவ்யா நாகேஷ் நடிக்கும் “புவனகாடு“!

மலர் மீடியா என்ற பட நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்திற்கு “புவனகாடு” என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக திவ்யா நாகேஷ் நடிக்கிறார். நிழல்கள் ரவி, பாண்டு, அனுமோகன், கராத்தே ராஜா, தேசிங்கு ராஜா, மணி, திரவேஷ், குட்டிமலர், ஆரியா மற்றும் சின்ராசு ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - ரவிசாமி. இசை – சரத் பிரியதேவ். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார் V.M.மோகன். படம் பற்றி இயக்குனர் V.M.மோகனிடம் கேட்டபோது, “ஒவ்வொரு மனிதனுக்கும் பணம் தேவை. தேவை என்பதற்கு எல்லை இல்லை. மேலும் மேலும் தேவைகள் என்பதால் பணம் என்பது விஷமாகிவிடும்.
பணம் பாதாளம் வரை பாயும் - பழமொழி.
பாசமும் பாதாளம் வரை பாயும் – இது புதுமொழி.
அன்பு, பாசம், காதல் இவை இருபுறமும் வெட்டு ஆயுதம் நல்லவனாகவும் கெட்டவனாகவும் மாற்றும் இதைத்தான் இதில் பதிவு செய்திருக்கிறேன். செழிப்பான காடு புவனகாடு அதில் புதைந்து கிடக்கிற மரங்கள் தான் இந்த படத்தில் பரபரப்பை ஏற்படுத்தும். விக்னேசுக்கு சிறப்பான வேடம் .நல்ல ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார். படம் விரைவில் வெளியாக உள்ளது என்றார் V.Mமோகன்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
