Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

7 வருடங்களுக்கு பிறகு வரும் "தல பொங்கல்"!!

•On July 22, 2013
945700_595655413780880_139152773_n
Share
945700_595655413780880_139152773_n அடுத்த வருடத்தின் ஆரம்பமே அஜீத்குமாரின் ரசிகர்களுக்கு கோலாகலமான வருடமாக இருக்கும். விஜயா productions சார்பில் சிவா இயக்கத்தில் அஜீத்குமார்  ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத  படத்தின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்தது. தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி, பாரதி ரெட்டி ஆகியோர் இப்படத்தை பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத்குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே அடுத்த பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர். 50% படம் முடிவடைந்த நிலையில் சுவிட்சர்லாந்து நாட்டின் பெரும்பகுதிகளில் தேவிஸ்ரீபிரசாத் இசை அமைப்பில் இரு  இனிமையான பாடல்கள் தினேஷ் மாஸ்டரின் நடனம் அமைப்பில் அஜீத், தமன்னா ஜோடியுடன் படமாக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது அஜீத்குமார் படப்பிடிப்பில்தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இன்றி  எளிமையாக படப்பிடிப்பு குழுவினர்களோடு ஒருவராக பணிபுரிந்தது சக குழுவினரையும் உற்சாகமூட்டியது. சந்தானம், பாலா, விதார்த், முனீஸ், சுஹைல், 'நாடோடிகள்' அபிநயா, மனோசித்ரா, 'எதிர்நீச்சல்' சுசா குமார், ரமேஷ் கண்ணா, இளவரசு, அப்புகுட்டி, பிரதீப் ராவத், கிரேன் மனோகர், வித்யுலேகா ராமன், தேவதர்ஷினி மற்றும் சில நட்சத்திரங்கள் நடிக்க உள்ள இந்த பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளர்  வெற்றி, படத்தொகுப்பு காசி விஸ்வநாதன், stunts செல்வா, கலை மிலன். முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்த படத்தில் அஜீத்தின் உடை அமைப்பும், பாத்திர அமைப்பும் ரசிகர்களை கவர்வதுடன் அவர்களுக்கு பொங்கல் விருந்தாகவும் அமையும் எனக் கூறினார் தயாரிப்பாளர்கள்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.