Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் ஜிம்முக்கு போன “தல” அஜித்!!

•On November 27, 2013
ajith-gym-massive-look
Share
ajith-gym-massive-look ஆரம்பம் படத்துக்காக தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் அஜீத். அதற்காக உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என்று சில மாதங்களாக ஈடுபட்டு உடல் எடையை குறைத்துக்கொண்ட பின்னரே ஆரம்பம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். பின்னர் நடிக்கும் வீரம் படத்தில் கிராமத்து கதாபாத்திரம் என்பதால் உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. வேஷ்டி, சட்டையை மட்டுமே அப்படம் முழுக்க பயன்படுத்தியிருப்பதால், சில மாதங்களாக உடற்பயிற்சியில் அதிகமாக ஈடுபடவில்லை. இதனால் தற்போது கணிசமான அளவு அஜித்தின் உடல் எடை அதிகரித்துள்ளதாம். இந்த நிலையில் வீரம் படத்தை முடித்துகொடுத்த அஜித், அடுத்து கெளதம்மேனன் படத்தில் நடிக்கயிருக்கிறார். அப்படத்துக்காக மீண்டும் தனது உடம்பை பழைய நிலைக்கு கொண்டு வருகிறாராம். கெளதம் மேனன் பிப்ரவரி 15-ல் தொடங்கயிருப்பதால், அதற்குள்ளாக தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தினமும் அதிகபட்சம் 4 மணி நேரத்தை ஜிம்மிலேயே கழித்து வருகிறாராம் அஜீத். நகரத்து கதையில் உருவாகும் அப்படத்தில் படம் முழுக்க டீசர்ட் அணிந்தே வருகிறாராம் தல அஜித்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.