தேஜ் நடிக்கும் ‘விண்ணைத் தொடு’ லண்டனில் படமானது:

‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காந்தம்’ ஆகிய படங்களில் நடித்த தேஜ்,
‘விண்ணைத் தொடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ‘காட்டெக்’ என்ற ஹாலிவுட் படத்தைத் தயாரித்த கேட் உசைன், பிரெஸ்டிஜ் பிலிம்ஸ் சார்பில் ‘விண்ணைத் தொடு’ படத்தைத் தயாரித்து வருகிறார்.
தேஜ் கதாநாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை சமீரா நடிக்கிறார். நடிகை சமீரா ‘கேன்ஸ்’ விருதுக்கு நாமினேட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சூரி, நிரஞ்சன், குங்பூ ராஜநாயகம், ஹாலிவுட் குழந்தை நட்சத்திரம் யாசின் ஆகியோர் நடிக்கிறார்கள். குங்பூ ராஜநாயகம் வில்லனாக நடிக்கிறார்.
‘காந்தம்’ படப்பிடிப்பின்போது லண்டன் சென்றிருந்த தேஜை சந்தித்த லண்டன்
தொழிலதிபர் கேட் உசைன் தமிழ் படம் எடுக்க தனது ஆர்வத்தைச் சொல்லியுள்ளார்.
அதன் விளைவாகவே ‘விண்ணைத் தொடு’ படம் தொடங்கி லண்டனில் 20 நாட்கள் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்து ஜூன் மாதம் சென்னையில் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.
விஞ்ஞான’ அடிப்படையில் ஆக்ஷன் லவ் ஸ்டோரி படம் ‘விண்ணைத் தொடு’.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராஜ்குமார் இயக்குகிறார். ஒளிப்பதிவு - ராஜபாண்டி. வீர்சமர்த் இசையமைக்க, மிரட்டல் செல்வம் சண்டைப் பயிற்சி
அளிக்கிறார். எடிட்டிங் - தாமோதரன், நடனம் - கூல் ஜெயந்த், இணை
தயாரிப்பு - குங்பூ ராஜநாயகம். பிரெஸ்டிஜ் பிலிம்ஸ் சார்பில் லண்டன் தொழிலதிபர் கேட் உசைன் ‘விண்ணைத் தொடு’ படத்தைத் தயாரித்து வருகிறார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
