Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லிங்குசாமி படத்தை தொடங்கும் சூர்யா!

•On July 11, 2013
IMG_9889
Share
IMG_9889 தனது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் இணைந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளனர். இந்த ஆண்டு இரண்டு பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்க இருக்கின்றனர். அவற்றில் ஒன்று கமலஹாசன் நடிக்க, கிரேசி மோகன் வசனத்தில், ரமேஷ் அரவிந்த் இயக்கும் நகைச்சுவை படம். மற்றொரு படம் சூர்யா நடிக்க லிங்குசாமியே இயக்குகிறார். இந்தப் படத்துடன் கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்திலும் நடிக்க சம்மதித்திருந்தார் சூர்யா. இந்த இரு படங்களும் ஒரே நேரத்தில் தொடங்குவதாக இருந்தது. ஆனால் கவுதம்மேனன் படத்தின் கதையில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருப்பதால் படம் இன்னும் தொடங்காமல் உள்ளது. இதற்கிடையில் லிங்குசாமி படத்தின் கதை, நடிகர்கள் தேர்வு அனைத்தும் முடிந்து விட்டதால், அந்தப் படத்தை உடனே தொடங்க சூர்யா சம்மதித்துள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஆகஸ்ட் மாதம் பூஜையோடு தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடக்கவுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.