கேப் பார்த்து அடிக்கும் சூர்யா!

ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம் 2 சூர்யா, அனுஷ்கா ஜோடியுடன், ஹன்சிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி தென் ஆப்பிரிக்கா வரை நடந்தது. சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டன.
பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்தபடம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வரும் ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. ஜூலை மாதம் ரம்ஜான் நோன்பு சமயத்தில் தெலுங்கு மற்றும் இந்தியில் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகாது. இதனை சாதகமாக்கி ஜூலை 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது சிங்கம் 2.
சிங்கம் படம் உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் ரவுடிகள் பற்றியது. சிங்கம்-2 படத்தில் சர்வதேச தாதாக்களுடன் சூர்யா மோதுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஹன்சிகா பள்ளி மாணவியாக வருகிறார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
