Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிங்கம்-II படத்துக்கு “U” சர்டிபிகட்! ஜூலை 5-ல் 2400 தியேட்டர்களில் ரிலீஸ்!

•On June 26, 2013
Surya-starrer-Singam-2-Shooting-in-Progress-poster
Share
Surya-starrer-Singam-2-Shooting-in-Progress-poster ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் இரண்டாம் பாகம் சிங்கம் 2 சூர்யா, அனுஷ்கா ஜோடியுடன், ஹன்சிகா, விவேக், சந்தானம் ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கி தென் ஆப்பிரிக்கா வரை நடந்தது. சமீபத்தில் பாடல்கள் வெளியிடப்பட்டன. பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் இந்த படம் தணிக்கை சான்றிதழ் பெற தணிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் குடும்பத்தோடு பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு படம் என்று கூறி “U” சான்றிதழ் கொடுத்துள்ளனர். வரும் ஜூலை 5ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் பெரிய அளவில் உலகமெங்கும் 2400 திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.