Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சக்தி, பூர்ணா நடிக்கும் பிரமாண்டமான படம் “படம் பேசும்”!

•On June 29, 2013
_MG_5095
Share
_MG_5095 ஆப்பிள் பிளாசம் கிரியேசன்ஸ் பி. லிட். பட நிறுவனம் சார்பாக எச்டி. நாராயணபாபு, பூர்ணிமா நாராயண், வாசன்.எஸ்.எஸ் ஆகியோர் தயாரிக்கும் படம் “படம் பேசும்”. இந்த படத்தில் சக்தி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக பூர்ணா நடிக்கிறார். இன்னொரு கதாநாயகனாக சங்கர்  நடிக்கிறார். விவேக், ஷாயாஜி ஷிண்டே, நாகபாபு, ரியாஸ்கான், சித்தாரா, மற்றும் சீதா இவர்களுடன் ஒரே ஒரு பாடல் காட்சிக்கு நிஷா கோத்தாரி நடனம் ஆடி இருக்கிறார் ஒளிப்பதிவு – P.K.H. தாஸ், இசை –  மணி சர்மா. எழுதி இயக்கி இருப்பவர் – ராகவா. படம் பற்றி இயக்குனர் ராகவா கூறும்போது, “இது பக்கா ஆக்க்ஷன் கமர்சியல் படம். ஷக்தியின் சினிமா கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். பத்து கோடி செலவில் இந்த படம் தயாராகிக்கொண்டிருகிறது. இது மாதிரி ஒரு படம் ஏற்கெனவே நாம் பார்த்தோமோ என்கிற எண்ணம் யாருக்குமே ஏற்படாது. புது மாதிரியாக இருக்கும். இந்த படத்திற்காக ‘’கண்ணாமூச்சி கண்ணாமூச்சி நீ தேட, நான் தேட காட்டில் விட்டாச்சு” என்ற பாடல் காட்சியில் நிஷா கோத்தாரி ஆடி அசத்தி விட்டார். படப்பிடிப்பு மொத்தமும் முடிவடைந்து, இறுதிக்கட்ட வேலைகளில் இருக்கிறோம். விரைவில் படம் வெளியாக இருக்கிறது என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.