Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

படம் ஓடுறத வச்சி சம்பளம் கொடுங்க போதும்,, செல்வராகவன் அதிரடி!

•On November 20, 2013
71619708-director-selvaraghavan
Share
71619708-director-selvaraghavan இன்றைய தேதி வரையில் செல்வராகவன் இயக்கத்தில் உருவான மெகா பட்ஜெட் படம் என்ற பெயரை பெற்றுள்ளது இரண்டாம் உலகம். சுமார் 6௦ கோடிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க பிவிபி சினிமாஸ் தயாரித்துள்ளது. படம் வரும் 22-ஆம் தேதி உலகமெங்கும் 12௦௦ தியேட்டர்களில் வெளியாகிறது. இந்த படத்தின் பட்ஜெட் குறித்தும், எவ்வளவு வசூல் செய்யும் என்பது குறித்தும் நிறைய பேர் கணக்கு போட்டு கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் “படம் எவ்வளவு வசூல் செய்கிறதோ அதை வைத்து சம்பளத்தை கொடுத்தால் போதும் என்று செல்வராகவன் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது உண்மையான காதலை சொல்லும், செல்வராகவன் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த படத்தை நிறைய பேர் தயாரிக்க முன்வரவில்லை. ஆனால் 6௦ கோடி செலவழித்து பிவிபி தயாரிக்க முன்வந்ததே போதும். சம்பளம் ஒரு பொருட்டல்ல. வசூலை பொறுத்து சம்பளம் கொடுங்கள், அது போதும்” என்று கூறி விட்டாராம் செல்வராகவன்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.