Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

Samantha crosses 1Cr mark:

•On December 25, 2012
DSC_5122
Share
நான்கே படங்களில் கோடியில் சம்பளம் வாங்கும் சமந்தா: கோலிவுட், டோலிவுட் இரண்டிலுமே இப்போது அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகை என்ற 'பெருமை' வேறு யார் இன்றைய கனவுக் கன்னி சமந்தாவுக்குப் போயிருக்கிறது. சமந்தாவின் லேட்டஸ்ட் சம்பளம் ரூ 1.25 கோடி. தெலுங்கில் இப்போது அவர் நடிக்க ஒப்புக் கொண்டுள்ள புதிய படத்துக்கு இந்த சம்பளம் தரப்பட்டுள்ளது. நயன்தாரா, தமன்னா, த்ரிஷா, அனுஷ்கா போன்றவர்கள்தான் இதுவரை தமிழ், தெலுங்கில் அதிக சம்பளம் பெற்று வந்தனர். இப்போதும் இவர்கள் ஒரு கோடி ப்ளஸ் சம்பளமாகப் பெறுகின்றனர். ஆனால் இந்த தொகையை எட்ட அவர்கள் நிறைய படங்களில் நடிக்க வேண்டியிருந்தது. ஆனால் சமந்தா நான்கைந்து படங்களில் அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார். இவரது சம்பளத்தை உயர்த்தியதில் இருவருக்கு முக்கியப் பங்குண்டு. ஒருவர் தில் ராஜு மற்றொருவர் பெல்லம் கொண்டா சுரேஷ். முதல் தயாரிப்பாளர் ரூ 1 கோடி வரை சமந்தாவுக்கு கொடுத்தார். அடுத்தவர் இப்போது 1.25 கோடி தர ஒப்பந்தம் போட்டுள்ளார். இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கிறார் சமந்தா. தமிழில் அடுத்து ஒப்பந்தமாகும் படத்துக்கு சமந்தாவின் சம்பளம் இதுதானாம்!  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.