Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

Redgiant's back to back movies:

•On December 30, 2012
7am-arivu-uthayanithi
Share
ஒரே நேரத்தில் தயாராகும் கணவர் மற்றும் மனைவியின் படங்கள்: ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை படங்களை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் இரண்டு படங்களை தயாரிக்கிறார். ஒன்றில் அவரே ஹீரோவாக நடிக்கிறார். மற்றொன்றை அவரின் அருமை மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். உதயநிதி நடிக்கும் படத்தை, எஸ்.ஆர். பிரபாகரன் இயக்குகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இதன் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். உதயநிதியின் மனைவி கிருத்திகா இயக்கும் முதல் படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடிக்கிறார். ப்ரியா ஆனந்த் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த தகவல்களை அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மிக முக்கியமாக இந்த இரண்டு படங்களிலும் காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானம் நடிக்கிறார். உதயநிதி படத்திற்கு "கதிர்வேலன்" என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.