புறம்போக்கு தலைப்போடு வெளியான முதல் போஸ்டர்!!

ஆர்யா - விஜய் சேதுபதி நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கவிருந்த படம் ‘புறம்போக்கு’. இந்த படத்தின் தலைப்புக்காக ஒரு பிரச்சினை ஜனநாதன் டீமுக்கும், ஒளிப்பதிவாளர் நடராஜுக்கும் இடையே நடந்து வந்தது. இதில் சுமூக பேச்சுவார்த்தை நடத்தி இந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்ற முடிவில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இருந்தார். ஒருகட்டத்தில் இந்த தலைப்பை உதறித் தள்ளிவிட்டு வேறு தலைப்பை வைக்கவும் முடிவு செய்தார்.
இந்நிலையில், இந்த ‘புறம்போக்கு’ தலைப்பு தங்களுக்குத்தான் சொந்தம் என்று யுடிவி மோஷன் பிக்சர்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘புறம்போக்கு’ தலைப்பு எங்களுக்குத்தான் சொந்தம் என்று தயாரிப்பாளர் சங்கமும், பிலிம் சேம்பரும் அனுமதி கடிதங்கள் கொடுத்துள்ளன. எனவே, இனிமேல் ‘புறம்போக்கு’ தலைப்பு எங்களுடையதுதான். என்று தெரிவித்துள்ளது. மேலும் படத்தின் முதல் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.
விரைவில் படப்பிடிப்பை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியலையும் வெளியிடப்போகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
