லிப்-டு-லிப் முத்தகாட்சி-னாலே ஹீரோக்களுக்கு கொண்டாட்டம் தான், நாயகி பளீர்!

அறிமுகமே மறுமுகம் மற்றும் உயிருக்கு உயிராக என இரண்டு படங்கள் நடிகை ப்ரீத்தி தாசுக்கு. மறுமுகம் படம் பற்றி அவர் கூறும்போது, “மறுமுகம் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ராதிகா. டேனியல் பாலாஜி, அனூப் இருவரும் நடித்துள்ளனர். பக்கா த்ரில்லர். முதல் படம். கொஞ்சம் நடுக்கத்தோடு நடித்த படம். நிறைய சொதப்பினேன். முதல் படம்.. மொழி தெரியாது. காமிரா தெரியாது.
எனக்கு முன்னாடி நடிப்பில் தூக்கி சாப்பிடுகிற டேனியல் பாலாஜி. ஆனால் எல்லோரும் பொறுமையா என்னை நடிக்க வச்சாங்க. தேங்க்ஸ் டு டைரக்டர் கமல் சார். தயாரிப்பாளர் சஞ்சய்க்கு நன்றி சொல்லியே ஆகணும். என் சினிமா வாழ்க்கையை தொடங்கி வச்சார். மறுமுகத்தில் நடிக்க நிறைய இடம். ஒன்றும் தெரியாத வயதில் நாம் எடுக்கும் முடிவுகள் நம்மை எப்படிப் பாதிக்கின்றது. அதிலிருந்து எப்படி வெளியே வருகிறோம் என்பது மாதிரியான கதாபாத்திரம்.
மறுமுகத்தில் டேனியல் பாலாஜி மற்றும் அனுப். மறுமுகத்தில் அப்படி ஒரு காட்சி வருகிறது. முதல் படத்திலே லிப் டு லிப் கொடுக்க வைத்து விட்டார்கள். கதாநாயகர்களுக்கு சந்தோசம் இருக்கலாம். ஆனால் நமக்குத் தான் அத்தனை பேருக்கு முன்னால் கொடுக்க தயக்கமாகி விடுகிறது.
அதுவும் ஒரு டேக்கில் முடிந்தால் பரவாயில்லை. எது சீக்கிரம் முடிஞ்சிடம்னு நினைக்கிறோமோ அது இன்னும் அதிக டேக் வாங்கும். முத்தக்காட்சி பத்து டேக் போயிருக்கும். இருந்தாலும் கதைக்குத் தேவைப்பட்டது, நடித்தேன். மிகவும் கண்ணியமாக படமாக்கியிருக்கிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
