Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மாதம் முழுக்க ஜெயம் ரவியுடன் மோதும் நாதன் ஜோன்ஸ்!

•On July 10, 2013
Nathan jones
Share
Nathan jones ஜெயம் ரவி - த்ரிஷா இணைந்து நடிக்கும் படம் ‘பூலோகம்’. மிகவும் பிரம்மாண்டமான படமாக தயாரித்து வருகிறார் ஆஸ்கார் ரவிச்சந்திரன். இந்தப் படத்தில் வரும் ஒரு முக்கியமான சண்டை காட்சிக்காக ஹாலிவுட் நடிகர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சொல்ல, இப்போது ஏழு அடி உயரமும், 150 கிலோ எடையும் கொண்ட, ஆங்கிலப் படத்தில் நடித்து வரும், மல்யுத்த வீரரான நேதன் ஜோன்ஸ் ஜெயம் ரவியுடன் மோதுகிறார். ஒரு மாதம் வரை நடக்க உள்ள இந்த படத்தின் இறுதி  கட்ட படப்பிடிப்புக்காக சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் மூன்று கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய செட் அமைத்திருக்கிறார்கள். இதில் பங்கேற்பதற்காக நாதன் ஜோன்ஸ் சென்னை வந்துள்ளார். அவருக்கு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் கோலாகலமான வரவேற்பு அளித்தார். இப்படத்தில் நேதன் ஸ்டீவென் ஜார்ஜ் என்ற கதாபாத்திரத்தில் இந்தியாவுக்கு வந்து 'பூலோகம்' என்ற ஜெயம் ரவி கதாபாத்திரத்துடன் மோதும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார். அவருடன் லார்நெல் ச்டோக்கால் என்ற ஹாலிவுட் முதல் தர சண்டை இயக்குனர் தன் குழுவினருடன் வந்துள்ளார். மிகுந்த சிரமத்துக்கிடையே  அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர தயாரிப்பாளர் ரவிச்சந்திரன், இயக்குனர் கல்யாண், ஆகியோருடன் ஒருங்கிணைத்து பணியாற்றினார் ஹாலிவுட்டை சேர்ந்த தமிழர் ஜாக் ராஜசேகர். இந்தப் படம் தன் சினிமா கேரியரில் மிகவும் முக்கிய படமாகவும், பிரம்மாண்டமான படமாகவும் இருக்கும்’ என்கிறார் ‘ஜெயம்’ ரவி. குத்துச் சண்டையை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை என்பதால் அதிரடிக்கு பஞ்சமிருக்காது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.