Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஜெய் நடிக்கும் முழுநீள காமெடி படம், சரஸ்வதி சபதம்!

•On July 2, 2013
Saraswathi Sabatham (5)
Share
Saraswathi Sabatham (5) பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வரும் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் மற்றுமொரு முக்கியமான படம் சரஸ்வதி சபதம். ஏ.ஜி.எஸ்.எண்டர்டைன்மெண்ட் தயாரிப்பில் இந்த படத்தை இயக்குகிறார் சந்துரு. இவர் வெங்கட் பிரபு, சி.எஸ்.அமுதன் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். போராளி படத்தில் நடித்த நிவேதா தாமஸ் நாயகியாக நடிக்க விடிவி கணேஷ், மனோபாலா, சத்யன், சுப்பு பஞ்சு மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். விண்மீன்கள் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜ.ஆனந்த் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக இருந்த பிரேம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார். வைரமுத்துவும், மதன் கார்க்கியும் பாடல்களை எழுதுகிறார்கள். படம் பற்றி இயக்குனர் கூறும்போது, "இது பழைய சரஸ்வதி சபதம் படத்தின் ரீமேக் அல்ல. கதைக்கு பொருத்தமாக உள்ளதால் இந்த தலைப்பை மட்டும் பயன்படுத்தி உள்ளோம்.முழு நீள காமெடி படமாக உருவாகி வருகிறது. 80% முடிந்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மலேசியா மற்றும் பாங்காக்கில் நடைபெறுகிறது, என்றார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.