Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

தேசிங்கு ராஜாவில் ஒரு இதயக்கனி!

•On June 23, 2013
Desingu-Raja-Vimal-Bindu-Madhavi-Stills-613z00001252013z
Share
Desingu-Raja-Vimal-Bindu-Madhavi-Stills-613z00001252013z எஸ்கேப்  ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் P.மதன் வழங்க ஒலிம்பியா மூவீஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படம் “தேசிங்கு ராஜா”. விமல் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிந்துமாதவி நடிக்கிறார். சார்லி, சூரி, சாம்ஸ், சிங்கம் புலி, ரவிமரியா, சிங்கமுத்து, ஏ.ஞானவேல், ஆடுகளம் நரேன், வெ.ஆ.மூர்த்தி, சாமிநாதன் வினுசக்ரவர்த்தி, வனிதா, வடிவுக்கரசி, அப்பத்தா ஆகியோர் நடிக்கிறhர்கள். ஒரு பாடல் காட்சியில் பானு குத்தாட்டம் போட்டிருக்கிறார்.. வசனம் ராஜசேகர், ஒளிப்பதிவு சூரஜ் நல்லுசாமி, பாடல்களை யுகபாரதி எழுத டி.இமான் இசை அமைத்துள்ளார். கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.எழில். படம் பற்றி  இயக்குனர் எஸ்.எழில் கூறும்போது, “விமல் இதயக்கனி  என்கிற  கதாபாத்திரத்தில்  எம்.ஜி.ஆர். ரசிகராக நடிக்கிறார். “தேசிங்கு ராஜா” படத்தின் டப்பிங்கின் போது நிறைய டப்பிங் கலைஞர்கள் படத்தின் பல காட்சிகளைப் பார்த்து விட்டு கைதட்டி ரசித்ததுடன் இல்லாமல் நடனமாடி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். அந்தளவுக்குப் படம் படுகமர்சியலாக வந்திருக்கிறது. விரைவில் திரைக்கு வரும் இந்தப் படம் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்று நம்புகிறோம். ஜூலை 19-ல் படம் வெளியாகிறது என்றார் எழில்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.