ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன்! நாயகி ஹன்சிகா!!

தனுஷ் தயாரித்த எதிர்நீச்சல் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் வேல்யூவை ராக்கெட் வேகத்தில் உயர்த்தியிருக்கிறது. அவர் கை நிறைய படங்கள் வந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஒரு புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கதை, திரைக்கதை ஏ.ஆர்.முருகதாஸ். நாயகி ஹன்சிகா மொத்வானி. படத்தை இயக்குபவர் முருகதாசிடம் உதவி இயக்குனராக இருந்த திருக்குமரன். இசை அதே அனிருத் தான்.
கதையை கேட்ட மாத்திரமே இந்தப் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தாராம் ஹன்சிகா. இது பற்றி ஹன்சிகா பேசுகையில், ''இயக்குனர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும் கௌரவமாகவும் கருதுகிறேன். இப்படத்தின் கதையும் திரைக்கதையும் என்னை மிகவும் கவர்ந்தது.
இது ஒரு முழு நீள காமெடி படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெரும் என்பதில் சந்தேகமே இல்லை. இப்படத்தின் படபிடிப்புக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.'' என்றார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
