Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கார்த்திக் மகனும், கலைப்புலி தாணு மகனும்!!

•On November 27, 2013
Gautham_Karthik
Share
Gautham_Karthik மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம் கார்த்திக்.. நவரச நாயகன் கார்த்திக்கின் மகனான இவருக்கு நடித்த முதல் படம் ஓடாதபோதும் தற்போது கைநிறைய படங்கள் உள்ளன. ஆனாலும் மகனின் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை கொண்டு வரும் கார்த்திக், கெளதமை ஆக்சன் ஹீரோவாக்குவதற்காகவும் கதை தேடிக்கொண்டிருந்தார். இந்நிலையில், சக்கரகட்டி படத்தை இயக்கிய கலைப்புலி எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு சொன்ன ஆக்ஷன் கதை பிடித்துவிட என்னமோ ஏதோ, சிப்பாய், வை ராஜா வை படங்களை முடித்ததும் அவர் படத்தில் நடிப்பதற்கு கெளதமை தயார்படுத்தி வருகிறார் கார்த்திக். ஏற்கனவே சக்கரகட்டி படத்தை இயக்கி தோல்வி கண்ட கலாபிரபு, இந்த முறை வெற்றிக்கனியை எட்டிப்பறித்து விட வேண்டும் என்று ஆக்ஷன்+காமெடி கலந்து ஸ்கிரிப்ட் பண்ணிக் கொண்டிருக்கிறாராம்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.