Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

சிறந்த விளம்பரங்களுக்கு விருது வழங்கும் எடிசன் அவார்ட்ஸ்!!

•On July 3, 2013
RAJ_7954
Share
RAJ_7954 சிறந்த தொலைக்காட்சி மற்றும் ஊடக விளம்பரங்களுக்கான விருது வழங்கும் விழா வரும் செப்டம்பர் மாதம் சென்னையில் நடக்கவிருக்கிறது. சிறந்த விளம்பரங்களுக்கான விருதுகள் வெளிநாடுகளில் வழக்கமான ஒன்று தான் என்றாலும், தென்னிந்தியாவில், தமிழில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சிகளில் இன்றைக்கு நிகழ்ச்சிகளை விட மிக சுவாரஸ்யமாகத் திகழ்வது விளம்பரங்களே. காரணம், நிகழ்ச்சிகளுக்கு இடையே வரும் விளம்பர இடைவெளியில் பார்வையாளர்கள் வேறு சேனல்களுக்கு தாவி விடாத அளவுக்கு சுவாரஸ்யமாக விளம்பரங்களைத் தரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்த விளம்பரங்களில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து TEA (Thomas Edison Advertisement Award) விருதினை வழங்குகிறது ஜெசெல்வகுமாரின் எடிசன் விருது நிறுவனம். இந்த நிறுவனம் சார்பில் ஆண்டுதோறும் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சிறந்த விளம்பரங்களுக்கான TEA 2013 விருது குறித்த செய்தியாளர் சந்திப்பு மற்றும் லோகோ அறிமுகம் இன்று ஷெல்ட்டர் ஹோட்டலில் நடந்தது. இந்தியாவுக்கான மலேசிய தூதர் சித்ரா தேவி ராமையா, நடிகைகள் வரலட்சுமி, காதல் சரண்யா, அர்ச்சனா, நடிகர் வின்சென்ட் அசோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, TEA 2013 லோகோவை அறிமுகப்படுத்தினர். விளம்பரங்களைத் தேர்வு செய்வதற்கான ஆன்லைன் வாக்களிப்பை நடிகர் வின்சென்ட் அசோகன் தொடங்கி வைத்தார். www.edisonawards.in என்ற இணையதளத்தில் பொதுமக்களும் தங்களுக்குப் பிடித்த விளம்பரங்கள் மற்றும் அதில் நடித்தவர்களுக்கு வாக்களிக்கலாம்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.