Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

டமால்-னு முடிவெடுத்து டுமீல் ஆன ஹீரோ!!

•On November 9, 2013
vaibhavcropped
Share
vaibhavcropped இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் ஸ்ரீ டைரக்ட் செய்யும் படம் டமால் டுமீல். மங்காத்தா படத்தில் நடித்த வைபவ் ஹீரோ, ரம்யா நம்பீசன் ஹீரோயின். தமன் இசையமைக்கிறார். படத்தை பற்றி இயக்குனர் ஸ்ரீ கூறும்போது, “வாழ்க்கையில எதற்கெடுத்தாலும் யோசிக்காம டாமால்னு முடிவு எடுத்தோம்னா வாழ்க்கை டுமீல் ஆயிடும்”ங்ற கருத்தை கொஞ்சம் காமெடியாகவும், கொஞ்சம் பயமுறுத்தியும் சொல்ற படம். அதாவது பிளாக் காமெடி திரில்லர் படம். படத்தோட ஹீரோ லஞ்சம் கொடுத்தே அனைத்தையும் சாதித்து விடலாம் என்று நினைப்பவன். அப்போது அவன் ஒரு டமால் முடிவெடுத்ததன் விளையாக டுமீல் ஆகிறான். அதிலிலிருந்து அவன் எப்படி தப்பிக்கிறான்ங்றதுதான் படத்தோட திரைக்கதை. வைபவ்வை அடுத்த கட்டத்துக் கொண்டு செல்லும் படம். ரம்யா நம்பீசனும் நல்லா நடிச்சிருக்காங்க. ஷூட்டிங்கெல்லாம் முடிஞ்சி போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு” என்றார்.  ,

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.