தாதாவாகும் லட்சியத்தோடு சென்னை வரும் ஹீரோ !

களிகை G.ஜெயசீலன் வழங்க ஜெனி பவர்புல் மீடியா படநிறுவனம் சார்பாக பெல்சி ஜெயசீலன் தயாரிக்கும் படம் “அதுவேற இதுவேற”. இந்த படத்தில் வர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சானியாதாரா நடிக்கிறார். இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பொன்னம்பலம், சிங்கமுத்து, தளபதி தினேஷ், தியாகு, ஷகீலா, போண்டாமணி, சுப்புராஜ், வேல்முருகன் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கிறார்கள். இமான் அண்ணாச்சி முழுக்க முழுக்க நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார்.
ஒளிப்பதிவு - ரவிஷங்கர். இசை - தாஜ் நூர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் M.திலகராஜன். படம் பற்றி இயக்குனர் திலகராஜன் கூறும்போது, “படத்தை பார்க்க வரும் ரசிகர்கள் அனைவரும் இரண்டு மணி நேரம் சந்தோஷமாக சிரித்து விட்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உருவாக்கப்பட்டுள்ள படம்.
சென்னைக்கு எவ்வளவோ பேர் என்னன்னவோ ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வருவார்கள். ஆனால் தாதாவாக வேண்டும் என்று வரும் ஒருவனது காமெடி கதைதான் இது.
இந்த படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள் பார்த்து ரசித்து விட்டு சான்றிதழ் வழங்கி நல்ல படம் என்று பாராட்டினார்கள். இதை கேள்விப்பட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் படத்தை வாங்க போட்டி போட்டு கொண்டு இருக்கிறார்கள். இதுவே சின்ன படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றி என்கிறார் இயக்குனர் திலகராஜன்.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஇரண்டாம் உலகம் – விமர்சனம்!
