Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

மீண்டும் ஆர்யாவுடன் சேர்ந்த ராஜேஷ்!

•On November 11, 2013
arya-nayanthara-boss-engira-baskaran-1-03-08-10
Share
arya-nayanthara-boss-engira-baskaran-1-03-08-10 தீபாவளிக்கு வெளியான அழகுராஜா என்ற ஒரே படம் இயக்குநர் ராஜேஷ் மற்றும் சந்தானம் ஆகிய இருவருக்கும் பெரிய ஹிட் அவசியம் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு எதிர்மறைக் கருத்துகள், விமர்சனங்கள் எழுந்து பெரும் தோல்வியை சந்தித்துள்ளது அழகுராஜா. இந்நிலையில் தனது நண்பர்களுக்கு கைகொடுக்க வந்துள்ளார் ஆர்யா. ராஜேஷ் இயக்கிய முதல் மூன்று படங்களிலும் நடித்த ஆர்யா ராஜேஷ் படத்துக்கும் கால்ஷீட்டு தந்துள்ளார். இப்போது ஆர்யா - சந்தானம் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் ராஜேஷ். இந்தப் படத்தை ஆர்யாவே தனது தி நெக்ஸ்ட் பிக் நிறுவனம் மூலம் தயாரிக்கிறாராம். இது தவிர ஆர்யா தற்போது மகிழ் திருமேனியின் படம் மற்றும் எஸ்பி ஜனநாதனின் புறம்போக்கு போன்ற படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.