வெளியானது ஜெயம் ரவியின் டிக் டிக் டிக் படத்தின் டிரெய்லர்!

 ,
[video ]https://youtu.be/6ug9zvC9pJM[/video]
சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள 'டிக் டிக் டிக்' படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.
நேமிசந்த் ஜெபக் தயாரிப்பில் சக்தி செளந்தராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் 'டிக் டிக் டிக்'. இதில் அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். சிறப்பம்சமாக ஜெயம் ரவியின் மகன் ஆரவ்-வும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பூமியின் மீது மோத வரும் விண்கல்லை எதிர்கொள்வது குறித்ததாக கதை அமைந்துள்ளது.
'இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்' என்ற அடைமொழியுடன் வெளியாகியுள்ள இப்படம் ரசிகர்களிடம் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
