Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விஷாலின் அடுத்த படத்தின் இயக்குநர் யார் ?

•On September 1, 2021
Vishal n Sunaina Stills
Share

ரமணா மற்றும் நந்தா தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியது.

விஷால் தனது அடுத்த புதிய படத்திற்கான படப்பிடிப்பை ஆரம்பித்து விட்டார். பெயரிடப்படாத இதற்கு தற்காலிக பெயராக #விஷால்32 என்று வைத்துள்ளார்கள். இவருக்கு ஜோடியாக சுனைனா நடிக்கிறார்.

பல வெற்றிப்படங்களில் பணியாற்றிய A. வினோத்குமர் இப்படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார்.

நடிகர்களில் நெருங்கிய நண்பர்களான ரமணா, நந்தா இருவரும் இணைந்து 'ரமணா புரொடக்‌ஷன்ஸ்' என்ற பெயரில் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்கள். இந்த நிறுவனம் தான் #விஷால்32 படத்தை தயாரிக்கிறது. ஏற்கனவே, சன் டிவியில் ஒளிபரப்பான “சன் நாம் ஒருவர்” என்ற நிகழ்ச்சியை இந்த ராணா புரொடக்‌ஷன்ஸ் தான் தயாரித்தது. இந்த வெற்றியை தொடர்ந்து தனது நண்பர்கள் ரமணா, நந்தா தயாரிக்கும் இப்படத்தில் நடிக்கிறார் நடிகர் விஷால்.

இதன் படபிடிப்பு பூஜையுடன் ஆரம்பமானது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இப்படம் மூலம் முதன் முறையாக விஷால் ஜோடியாக சுனைனா நடிக்கிறார். சுனைனா படங்களில் இது முக்கிய படமாக இருக்கும்.


வசனம்: A.வினோத்குமார்/பொன்பார்த்திபன்.
சாம் CS இப்படத்திற்கு இசையமைக்க, பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்கிறார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.