Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

விக்ரமுடன் வில்லனாக மோதும் பிருத்விராஜ்!

•On April 20, 2017
vikaram
Share
vikaram ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிகர் விக்ரமுடன் மோதுகிறார் நடிகர் பிருத்விராஜ். தமிழிலும், மலையாள சினிமாவிலும் எல்லாவிதமான கதாபாத்திரங்களிலும் துணிச்சலாக நடித்து வருபவர் நடிகர் பிருத்விராஜ். குறிப்பாக, தமிழில் அறிமுகமான ‘கனா கண்டேன்’ படத்தில் வில்லனாக அறிமுகமானார் பிருத்விராஜ். பின்னர் தமிழில் நாயகனாக நடித்தார். மீண்டும் சித்தார்த்துக்கு வில்லனாக ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்தார். அதன்பிறகு இந்தியில் ‘நான் சபானா’ என்ற படத்திலும் அதிரடி வில்லனாக நடித்தார் பிருத்விராஜ். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த தமிழ்ப் படத்திலும் நடிக்காத அவர், தற்போது கௌதம்மேனன் இயக்கும் ‘துருவநட்சத்திரம்’ படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார். விக்ரம் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறாராம் பிருத்விராஜ். இதற்கு முன்பு அவர் தமிழில் நடித்த வில்லன் வேடங்களை விட இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் தோன்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ‘ராவணன்’ படத்தில் விக்ரமுடன் பிருத்விராஜ் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.